Showing posts with label அறிவியல் செய்திகள் (Science News). Show all posts
Showing posts with label அறிவியல் செய்திகள் (Science News). Show all posts

Titanic Ship Under Water Picture

டொரன்டோ: 1912ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி, இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு நியூயார்க் நோக்கி சென்று கொண்டிருந்த டைட்டானிக் கப்பல், அட்லான்டிக் கடலில் பனிப்பாறையில் மோதி 2223 பயணிகளுடன் விபத்தில் சிக்கியது. இதில் 706 பயணிகள் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். மற்ற அனைவரும் இறந்தனர். பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்வை, 98 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அதன் சிதைந்து போன எஞ்சிய பாகங்களின் மூலம் நினைவு கூர்ந்து வருகிறார்கள். இவை அட்லான்டிக் கடல் பகுதியில் காட்சிப்பொருளாக வைக்கப் பட்டுள்ளன.

இந்நிலையில் டைடானிக் கப்பலின் பாகங்கள் வேகமாக அழிந்து வருவது தெரியவந்துள்ளது. அதில் இருந்து சேகரிக்கப்பட்ட நுண்ணுயிரியின் டிஎன்ஏ பரிசோதிக்கப்பட்டது. அப்போது ஆரஞ்சு நிறத்தில் உள்ள புதிய வகை பாக்டீரியா இரும்பை வேகமாக அழித்து வருவது தெரிந்தது.

இதனால் மிகவிரைவில் டைட்டானிக்கின் சிதைந்த பாகங்கள் முற்றிலும் அழிந்து தடயமின்றி போய் விடும் என்று கவலை தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். டல்ஹொஸ் ஹாலிபாக்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் கனடாவில் உள்ள நோவா ஸ்காட்டியா பல்கலைக்கழகம், ஸ்பெயின் செவிலா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு இணைந்து ஹென்ரீடா மான், பவ்லீன் கோர் ஆகியோர் தலைமையில் ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

அதில் கப்பலின் துருவை பொடியாக்கி அழித்து வரும் பாக்டீரியா முற்றிலும் புதிய வகை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி விஞ்ஞானிகள் கூறியதாவது, ‘இரும்பு துருப்பிடித்து மண்ணுடன் கலப்பதுதான் இயற்கை நியதி. இது கண்ணுக்கு புலப்படாத நுண்ணுயிர்களான பாக்டீரியாக்கள் மூலம் சாத்தியமாகிறது. இது மிகவும் மெதுவாகவே நடைபெறும். ஆனால் புதுவகை பாக்டீரியா, டைட்டானிக் கப்பல் பாகங்களை வேகமாக அழித்து வருகிறது.

அந்த புது பாக்டீரியா இரும்பை சிதைப்பதில் அதிக சக்தி வாய்ந்தது என்பது ஆய்வில் உறுதியாகி உள்ளது. இரும்பை அழிக்கும் பாக்டீரியாக்கள் ஏராளமாக உள்ளன. இருப்பினும் புதிய பாக்டீரியா அதிவேகமாக செயல்படுகிறது. அதிக பட்சமாக இன்னும் 15 முதல் 20 ஆண்டுகள் வரை மட்டுமே இதன் சிதைந்த பாகங்கள் இருக்கும்Õ என்று கவலையோடு சொல்கிறார்கள்.
Read More ...

0 comments

image credit: wikimedia
  



மீயொளிர் விண்மீன் வெடிப்பு (supernova) என்பது அளவில் பெரிய விண்மீன்கள் தம் எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் மாபெரும் அளவில் ஒளியாற்றலை வீசி பேரொளியுடன் வெடிப்பதை குறிக்கும். மீயொளிர் விண்மீன் வெடிப்புகள் ஒரு முழு நாள்மீன்பேரடை முழுவதையும் விஞ்சும் அளவுக்கு ஒளி வீசக்கூடியது. குறைந்த கால அளவிலே உணரக்கூடிய (சில வாரங்கள் அல்லது மாதங்கள்) இத்தகைய ஒளிர்வு ஆற்றல், சூரியன் தன் வாழ்நாள் முழுவதும் வெளியிடக்கூடிய மிகப்பெரும் ஆற்றலைவிட அதிகமானது. இத்தகைய வெடிப்பின் மூலம் சிதறும் விண்மீன் எச்சங்கள் ஒளியின் வேகத்தில் பத்தில் ஒரு மடங்கு வேகம் வரையிலும் கூட சிதறுகின்றன. மேலும் வெடிப்பின் அதிர்வலைகள் விண்மீன் மண்டலத்தின் முழுவதும் பரவ வல்லவை.
அளவில் பெரிய விண்மீன்கள் தம் பரிணாம வளர்ச்சியின் முடிவில் அவற்றில் உள்ள எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் தம் ஈர்ப்பு விசையில் மாற்றம் ஏற்படுவதனால் நியூட்ரான் விண்மீனாகவோ அல்லது கருங்குழியாகவோ மாறுகின்றன. இம்மாற்றத்தை அடையும் முன் அவற்றின் வெளிப்பகுதி ஈர்ப்பு நிலை ஆற்றலால் வெடித்து சிதறுகின்றது. (Credit: wikipedia.org)
Read More ...

0 comments



பிளாஸ்டிக் பாட்டில் விண்கலம்.. கிறிஸ்துமஸ் தாத்தா டிரைவர்

அமெரிக்காவின் ‘டிஸ்கவரி’ விண்கலம் திட்டமிட்டபடி புறப்படுவது மிக அரிது. கிளம்பும் நேரத்தில் எரிபொருள் டேங்க் சரியில்லை என்பார்கள். வெளியில் ஓடு கழன்று விழுந்துவிட்டது என்பார்கள். நாலைந்து நாள் கவுன்ட் டவுன் முடியப்போகும் நேரத்தில் விண்கல இன்ஜினை ஆஃப் செய்துவிட்டு இறங்கிவிடுவார்கள்.

இங்கிலாந்தில் சத்தமில்லாமல் ஒரு சாதனையை படைத்திருக்கிறார்கள் டேவன் கவுன்டியின் ஆஷ்பர்டன் நகரில் உள்ள ஆரம்பப்பள்ளி குழந்தைகள்.
குடித்துவிட்டு தூர தூக்கிப்போட்ட பழைய பிளாஸ்டிக் பாட்டில், ஒரு உருளைக்கிழங்கு, ஹீலியம் நிரப்பப்பட்ட அழுத்தமான பலூன்.. நூல் போட்டு கட்டினார்கள். காட்சிகளை பதிவு செய்ய ஒரு மினி கேமரா. எங்கே தரையிறங்குகிறது என கண்டுபிடிக்க ஜிபிஎஸ் கருவி. விறுவிறுவென ரெடியானது விண்கலம்.

குழந்தைகளாயிற்றே. உருளைக்கிழங்குக்கு கிறிஸ்துமஸ் தாத்தா போல மேக்கப் போட்டார்கள். வெள்ளை தாடி, மீசை, சிவப்பு தொப்பி.. ஜம்மென்று ரெடியாகிவிட்டார் சான்டாகிளாஸ் டிரைவர்.
பிளாஸ்டிக் பாட்டிலில் ‘அவரை’ வசதியாக உட்கார வைத்தார்கள். பள்ளிக்கு அருகே உள்ள பூங்காதான் ஏவுதளம். ‘‘லாஞ்ச் பண்ணலாமா மிஸ்’’ என்றனர் கோரசாக. ‘‘ஓகே கண்ணுகளா’’ மிஸ் பச்சைக்கொடி அசைக்க.. பலூனை பறக்கவிட்டது மழலைப் பட்டாளம்.

‘ஸ்புட்னிக்&2’ என்று பெயரிடப்பட்ட ‘விண்கலம்’ மெதுவாக உயரே கிளம்பத் தொடங்கியது. கைதட்டியும் உற்சாக குரல் எழுப்பியும் விடைகொடுத்து அனுப்பின குழந்தைகள்.
நூறு, இருநூறு அல்ல.. 90 ஆயிரம் அடி உயரம் (சுமார் 27 கி.மீ.) வரை சீராக பறந்தது. பலூன் அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. டமார். தயாராய் விரிந்தது பாராசூட். கிறிஸ்துமஸ் தாத்தாவின் பாட்டில் விண்கலம் மெல்ல இறங்கத் தொடங்கியது. காற்றின் போக்கில் பறந்து 225 கி.மீ. தொலைவில் உள்ள ஹாம்ப்ஷயர் நகரில் தரையிறங்கியது. ஜிபிஎஸ் உதவியுடன் மிக துல்லியமாக விண்கலத்தை கண்டுபிடித்தனர் குழந்தைகள். விண்ணில் அது எடுத்த புகைப்படங்களை ஆச்சரியப்பட்டு ரசித்தனர்.

தங்களது ‘விளையாட்டு’ சிறப்பாக முடிந்ததில் அவர்களுக்கு அபரிமிதமான குஷி. சவாலான விஷயத்தை சர்வசாதாரணமாக சாதித்திருக்கும் வாண்டுகளை இங்கிலாந்தே பாராட்டுகிறது.
Read More ...

0 comments

ஞாபக மறதியா கவலை வேண்டாம்!
 lumosity.com  என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்! பல்வேறு மருத்துவர்களின் ஆலோசனைகளால் வடிவமைக்க பட்டுள்ள இந்த இணையத்தளத்தில் நமது முளையின் செயல்திறனை மதிப்பீடு செய்வதோடு இல்லாமல் அதனை மேலும் செறிவூட்டும்  வகையில் வேகம், நினைவுத்திறன், கவனம், வளைந்துகொடுக்கும் தன்மை,  பிரச்சனைக்கு தீர்வு காணும் திறன் முதலியவற்றை அடிப்படையாக கொண்டு
வடிவமைக்க பட்டுள்ளது. தினமும் பத்து நிமிடங்கள் இதனை தொடர்ந்து பயன்படுத்துவோமானால் நமது மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்  என்பதில் சந்தேகமேயில்லை. இதில் மூளையின் செயல்திறனை அதிகரிக்க விளையாட்டுகளை வடிவமைத்தவர்களில் ஒருவரான டாக்டர் கோக்ஹேன் கூறுகிறார் "நாம் நம் மூளையை ஒவ்வொரு முறையும் சவால்களுக்கு உட்படுத்தும் போதும் அதன் செயல்திறன் மாறுகிறது!" மேலும் நமது சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு பல்வேறு வகையான ஆரோக்ய குறிப்புகளும் கொடுக்கபடுகின்றன.
Read More ...

0 comments

பிரிட்டிஷ் பௌதீக விஞ்ஞானியும், கணித நிபுணருமான ஸ்டீஃபன் ஹாக்கிங் சமீபத்தில் எழுதி இன்னும் வெளியில் வராத நூலில் கடவுள் இந்த உலகத்தைப் படைக்கவில்லை என்று கூறியுள்ளார். கருந்துளை பற்றிய தனது சிந்தனைகளால் விஞ்ஞான உலகை உலுக்கிய ஸ்டீபன் ஹாக்கிங் "தி கிராண்ட் டிசைன்" என்று தலைப்பிடப்பட்ட இந்த புதிய நூலை தன் சக விஞ்ஞானியான லியனார்ட் மிளோடினோவ் என்பவருடன் சேர்ந்து எழுதியுள்ளார்.

இந்த பூமி என்பது ஏதோ மனிதனை மகிழ்ச்சிப் படுத்த அக்கறையுடன் கவனமாக வடிவமைக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறுகிறார் ஸ்டீபன் ஹாக்கிங். ஏனெனில் இன்னொரு நட்சத்திரத்தை இன்னொரு கோள் சுற்றிக் கொண்டிருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகே நாம் எதையும் உத்தரவாதமாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதுதான் இவரது வாதம். சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்டீபன் ஹாகிங் எழுதும் பெரிய புத்தகம் இது என்று கூறப்படுகிறது.

இவர் 1988-ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டு மிகப்பிரபலமடைந்த "காலம் பற்றிய ஒரு சுருக்கமான வரலாறு" என்பதில் உலகைப் படைத்தவர் என்று ஒருவர் இருந்திருக்க வேண்டும் என்று கருதினார். அதாவது உலகத் தோற்றம் பற்றிய முழு கோட்பாடு என்பது மனித அறிவின் உச்சகட்ட சாதனையாகும், பிறகுதான் நாம் கடவுளின் மனம் என்ன என்பதை அறிய முடியும் என்று அந்த நூலில் அவர் கூறியிருந்தார்.

ஆனால் தற்போது "தி கிராண்ட் டிசைன்" என்ற நூலில் அந்த நிலைப்பாட்டிலிருந்து அவர் விலகியதாகவே தெரிகிறது. "புவியீர்ப்பு விசை என்ற விதி இருக்கும்போது பிரபஞ்சம் ஒன்றுமில்லாததிலிருந்து தானே உருவாக முடியும்." என்று கூறும் ஸ்டீபன் ஹாகிங் கடவுள் ஒருவர் உலக சிருஷ்டியின் பின்னணியில் இருந்தார் என்பதை மறுக்கிறார்.

"திடீரென உருவாகும் படைப்பு என்பதுதான் உண்மை அல்ல ஏதோ ஒன்று உள்ளது என்பதையும், ஏன் பிரபஞ்சம் உள்ளது, ஏன் நாம் இருக்கிறோம் என்பதையும் உறுதி செய்கிறது. பிரபஞ்சத்தை இயக்க வைக்கும் சக்தியாக கடவுள் என்ற ஒருவரை வரவழைக்க வேண்டியதில்லை." என்கிறார் ஹாக்கிங். இந்த நூலில் ஹாக்கிங், இந்தப் பிரபஞ்சம் உண்டானதில் கடவுளின் பங்கு இருக்கலாம் என்ற நியூட்டனின் கோட்பாட்டை விமர்சனம் செய்துள்ளார்.

ஆனால் ஹாக்கிங் எதையும் உறுதியாகக் கூறமுடியாது என்றுதான் கூறுகிறார். இதெல்லாம் எளிமையான விசயம் அல்ல என்கிறார். பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பதை அறிய அது ஏன் இவ்வாறு உள்ளது ஏன் வேறுமாதிரியாக இல்லை என்பதை அறிவது அவசியம் என்கிறார். இதுதான் வாழ்க்கை, பிரபஞ்சம் ஏன் அனைத்தைப்பற்றியுமான தலையாய கேள்வி என்று கூறுகிறார் ஹாக்கிங். இதற்கான விடையைக் காண இந்த நூலில் முயன்றுள்ளார்கள். இந்த நூல் செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியிடப்படலாம் என்று தெரிகிறது.


Read More ...

1 comments